எடப்பாடி தொகுதி வேட்பாளர்

Mar 30, 2026 - 22:26
 11
எடப்பாடி தொகுதி வேட்பாளர்
எடப்பாடி தொகுதி வேட்பாளர்

சேலம் 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த காசி போட்டியிடுகிறார்...

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார் இவரை எதிர்த்து காசி என்பவரை திமுக வேட்பாளராக .நிறுத்தி உள்ளது.

காசிக்கு தற்போது வயது 66 ஆகிறது.இவர் திமுக மாநில தொழிலாளர் அணி துணை செயலாளராக இருந்து வருகிறார்.இது தவிர ஜகண்டாபுரம் பேரூராட்சி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் .

இவர் பி ஏ வரை படித்துள்ளார். இவரது மனைவி பெயர் அமுதா.மூன்று மகன்கள் உள்ளனர்.ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார்.இது தவிர விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக திமுக வேட்பாளராக காசி நிறுத்தப்பட்டு உள்ளார்.தற்போது ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவராக பணிபுரிந்து வருகிறார்.

ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் 3முறை தலைவராக பதவி வகித்துள்ளார்.

காசிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதால்தான் திமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இந்த தேர்தலில் களம் இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0