பரமத்தி வேலூர் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Mar 21, 2026 - 17:03
 5
பரமத்தி வேலூர் அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி  பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திட்டமேடு கிராமத்தில் மயான ஆக்கிரம் போய் அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் அருகே உள்ள திட்டமேடு கிராமம் இந்த கிராமத்தில் நீண்ட நாள் பிரச்சனையாக மயானம் ஆக்கிரமிப்பு  இருந்து வருகிறது.

இது சம்பந்தமாக நீண்ட  நாட்களாக பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்களில் ஈடுபட்டும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மயானத்தில் தனிநபரின் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவுவிட்டும் மேற்படி உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை மயானத்தை ஆக்கிரமித்து இருக்கும் தனிநபர் மீது நடவடிக்கை இருக்க வேண்டும்.

திட்டமேடு கிராமம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் இல்லையெனில் வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த பகுதி பொதுமக்கள் பேனர் வைத்துள்ளனர் மேலும் கிராம முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கத்தை எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று திடீரென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டன பேனர் வைத்துள்ள இடத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மயானத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமத்தை அகற்றக் கூறியும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரியில் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரில். தயவுசெய்து அரசியல் கட்சியினர்  யாரும் எங்கள் ஊருக்குள் ஓட்டு கேட்க வர வேண்டாம் என பிளக்ஸ் பேனர் வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0