*அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நுழைந்த ஐந்து கனிமவள வாகனங்களுக்கு அபராதம்.......*
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர். R. ஸ்டாலின், IPS* அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோத கனிம வளக் கடத்தல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்கள் நடத்திய சோதனையில் ஐந்து கனிமவள வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மாவட்டத்திற்குள் நுழைந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நுழைந்த ஐந்து கனரக வாகனத்தையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0