ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாநில கைப்பந்து போட்டியில் சாம்பியன்.

Oct 10, 2026 - 18:45
 5
ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாநில கைப்பந்து போட்டியில் சாம்பியன்.

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் பள்ளி மாநில கைப்பந்துப் போட்டியில் சாம்பியன்!

7-வது முறையாக பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பையை வென்று சாதனை

ஆத்தூர்: சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 83 பள்ளிகளைச் சேர்ந்த 1,300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் மாணவிகள் பிரிவில் சேலம் மாவட்டம், ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் ஆத்தூர் பாரதியார் பள்ளி அணி 25-7, 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் கடலூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன் மூலம் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பையை பாரதியார் பள்ளி அணி 7-வது முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது பாரதியார் பள்ளி மாணவி டி.சௌமியாவுக்கு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி நிர்வாக இயக்குநர்கள் சால்வை அணிவித்து, ரொக்கப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.

சாதனை படைத்த மாணவிகளை ஆத்தூர் பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.இளவரசு, செயலாளர் டாக்டர் ஏ.கே.ராமசாமி, பொருளாளர் எஸ்.ஆர்.டி.செல்வமணி, நிர்வாக இயக்குநர்கள் ஏ.பி.செந்தில்குமார், எஸ்.பாலக்குமார், டி.சந்திரசேகரன், என்.ஆர்.பழனிவேல் மற்றும் பள்ளி முதல்வர் டி.நளாயினிதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மேலும், இந்த வெற்றிக்குத் துணைநின்ற முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0