மீனாட்சி சூப்பர் எஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 64 வயது விவசாயியின் அரிய வகை பிறவி இதய குறைபாட்டிற்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் வெற்றிகரமான சிகிச்சை

Apr 1, 2026 - 21:57
Apr 1, 2026 - 21:58
 10
மீனாட்சி சூப்பர் எஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 64 வயது விவசாயியின் அரிய வகை பிறவி இதய குறைபாட்டிற்கு குறைந்தபட்ச ஊடுருவல் முறையில் வெற்றிகரமான சிகிச்சை

தென் தமிழகத்தின் இதய சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு மிக முக்கிய சாதனை நிகழ்வாக, மீனாட்சி குப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 64 வயது விவசாயிக்கு இருந்த ஒரு அரிதான பிறவி இதயக் குறைபாட்டை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக சரிசெய்துள்ளது. சைனஸ் வீனோசஸ் ஏஎஸ்டி என அழைக்கப்படும் இந்த அரிய இதய பிரச்சனைக்கு, திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையை முற்றிலும் தவிர்த்து, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட டிரான்ஸ்கேத்தீட்டர் முறையில் (transcatheter covered stent procedure) இச்சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி குணமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதயவியல் துறைத் தலைவர் மற்றும் Suctural envention சிகிச்சைகளின் இயக்குநர் / மருத்துவர் சிவக்குமார் தலைமையில் இதய மயக்கலியல் நிபுணர் குமார் மற்றும் கேத் லேப் குழுவினர் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு நோயாளி 31 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது முடித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்த மருத்துவர் சிவக்குமார் கூறுகையில் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டதில சைனஸ் வினோசஸ் ஏஎஸ்டி' என்ற அரிய குறைபாடு இருப்பது தெரிந்தது. தென் தமிழகத்தில் இத்தகைய குறைபாட்டிற்கு டிரான்ஸ்கேத்தீட்டர் சுவரடு ஸ்டென்ட் முறையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது சில முறை மட்டுமே நடந்துள்ளது. திறந்தநிலை அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு பாதிப்பை அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் சரிசெய்துள்ளோம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0