.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே துணிகரம்: தூங்கிக்கொண்டிருந்தவரின் ஆட்டைத் பட்டம் பகலில் திருடிய தந்தை மகன் இருவர் கைது.

May 3, 2026 - 22:06
 5
.கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே துணிகரம்: தூங்கிக்கொண்டிருந்தவரின் ஆட்டைத் பட்டம் பகலில் திருடிய தந்தை மகன் இருவர் கைது.

கிருஷ்ணகிரி

மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வீரமலை அருகே உள்ள துருஞ்சிமரத்துக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முதலியான் மகன் வெங்கட்டேஷன் இவர் இன்று காலை சுமார் 11 மணி அளவில் தனது வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தார்.

​அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், வெங்கட்டேஷன் கோவிலுக்காக வளர்த்து வந்த ஆட்டைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். ஆடு கத்தும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த வெங்கட்டேஷன், உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் திருடர்களைத் துரத்திச் சென்றார்.சுமார் சில கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற வெங்கட்டேஷன், புட்டனூர் என்ற இடத்தில் திருடர்களின் வாகனத்தை வழிமறிக்க முயன்றார். அப்போது பிடிபடுவோம் என்ற பயத்தில், திருடர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆடு, திருடி வைத்திருந்த இரண்டு குத்துவிளக்குகள் மற்றும் ஒரு காமாட்சி விளக்கு ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்றனர் இதனைப் பார்த்த புட்டனூர் பகுதி பொதுமக்கள், அந்த இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து நாகரசம்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள்

பெருமாள் மகன் சுப்பிரமணி (56). சுப்பிரமணி மகன்

​சூர்யா (22), 

​இவர்கள் இருவரும் தந்தை மகன் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி அருகே மஞ்சுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது மத்தூர் மற்றும் ஊத்தங்கரை காவல் நிலையங்களில் ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் அம்பலமானது. தற்போது நாகரசம்பட்டி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, கைதான தந்தை - மகன் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் முன்னால் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை திருட முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0