பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருச்செந்தூர் கோவிலில் தரிசன டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் கடந்த 2.வருடமாக ரு.100.டிக்கெட்டுடன் புக் என்ற பெயரில் ரு.500ஐ புக்கிற்கு அடாவடி வசூல் செய்ததற்க்கு முற்றுப்புள்ளி வைத்த கோவில் இணை ஆணையர் ராமு, க்கு பக்தர்கள் பாராட்டு
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று
தூத்துக்குடி மே.2
திருச்செந்தூர் கோவிலில் கடந்த 2. வருடங்களாக தரிசன டிக்கெட் வாங்க வரும் பக்தர்களிடம் ரூ 500 மதிப்புள்ள புக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்று அடாவடி செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையை ஏற்று பக்தர்களுக்கு தரிசண டிக்கெட் மட்டும் ஊழியர்கள் வழங்க வேண்டும் புக் விற்பனை என்ற பெயரில் ரூ 500 வலுக்கட்டாயமாக வாங்க கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்ட கோவில் இணை இயக்குனர் ராமு,க்கு பக்தர்கள் பாராட்டு
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது திருச்செந்தூர் கோவில் மற்றும் அதை சார்ந்த தங்கும் விடுதிகள் கோவில் ஊழியர்கள் பணியாற்றும் அலுவலக கட்டிடம் உட்பட அனைத்து திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தானத்திற்கு இணையான வகையில் கட்டிடங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்த பிரபல தொழிலதிபர் சிவ் நாடார் என்பவர் தன் சொந்த பணத்தை ரு 300 கோடி மேற்படி கோவில் திருப்பணிகளுக்காக வழங்கியதாக கூறப்படும் நிலையில் திருக்கோவிலின் பணிகள் அனைத்தும் தற்ப்போதுநடைபெற்ற முடிந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் தினமும் ஆயிரக்கணக்கில் திருச்செந்தூர் கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு முருகப்பெருமானை தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்,
இன்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு அருள்மிகு முருகப்பெருமானைசாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் கோவில் ஊழியர்கள் அன்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும்,
அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை மூலம் வழங்கக்கூடிய உண்டியல்பணத்தில்தான் நாம் சம்பளம் வாங்குகிறோம் என்பதை இந்து அறநிலைத்துறை ஊழியர்களுக்கு நினைவூட்டும் வகையில்,
சமீபத்தில் இத் திருக்கோவிலுக்கு ஒரு 1.கோடிக்கு மேல் பக்தர்கள் உண்டியல் மூலம் வழங்கிய பணம் இத்திரு கோவில் வளர்ச்சி பணிக்காக பெரும் வருவாயை ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அருள்மிகு முருகப் பெருமானை தரிசிக்க கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வரக்கூடியபக்தர்களின் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக கோவிலில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்கள், பயன்படுத்திக் கொண்டு
தனியாக ஸ்டால் அமைத்து புக் விற்பனை செய்யவதை விடுத்து தரிசனத்திற்க்கான சாமி தரிசனம் செய்ய டிக்கெட் கேட்டு வரும் பக்தர்களிடம் டிக்கெட்டுடன் புக் என்ற பெயரில் ரு.500ஐ கடந்த இரண்டு வருடமாக அடாவடியாக கோவில்ஊழியர்கள் வசூல் செய்து வந்த நிலையில்,
கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நிருபர்களிடம் ரு.100.தரிசண டிக்கெட்டுடன் ரு.500.சேர்த்து கொடுத்து புக் வாங்குங்கள் என்று வலுக்கட்டாயமாக நிர்பந்தம் செய்ததாக கூறப்பட்ட சம்பவத்தை அறிந்த திருச்செந்தூர் கோவில் நிர்வாக இணை ஆணையர் ராமு இச்செயலில் ஈடுபட்டு வந்த மேற்படி இந்து அறநிலையத்துறை ஊழியர்களை அழைத்து இனிமேல் வலுக்கட்டாயமாக தரிசன டிக்கெட்டுடன் ரு.500.புக் என்ற பெயரில் வாங்க கூடாது என்று உத்தரவிட்டதாக கூறப்பட்டதை அறிந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோவில் இணை ஆணையர் ராமுக்கு பாராட்டு தெரிவித்தனர்,
இனிமேல் தரிசன டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் 500 ரூபாய் புக்கு வாங்க வேண்டும் என வற்புறுத்தினால் எனது அளவுகளத்தில் பக்தர்கள் புகார் தெரிவிக்கலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0