தமிழ்நாடு சிறுபான்மையினர் தலைவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டனத்துக்குரியது.
சேலம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஆரிப் அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது கண்டிக்கத்தக்கது..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் பேட்டி...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சிலர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் சையத் மஸ்ஹர் உசேன் நிஜாம் பாய்
மாநில துணை தலைவர்,
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
அப்போது அவர் கூறும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஆரிப் அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது கண்டிக்கத்தக்கது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் சுமார் 40 ஆண்டுகளாக களப்பணியில் இருப்பவர் அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார் நடை பயணங்களில் பங்கேற்றுள்ளார். அப்படிப்பட்டவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது கண்டிக்கத்தக்கது.
காலம் காலமாக காங்கிரஸ் கட்சிக்கு உழைத்தவர்.இதற்காக பல ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரை செய்துள்ளார்.அவருக்கு எந்த ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதை காங்கிரஸ் தலைமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
இதை கண்டித்து மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இந்த விவகாரம் தற்போது சேலம் மாவட்ட காங்கிரஸில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி:சையத் மஸ்ஹர் உசேன் நிஜாம் பாய்,மாநில துணை தலைவர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0