தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு போச்சம்பள்ளி தவெகவினர்பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்தின் புதிய முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு! போச்சம்பள்ளியில் தவெகவினர், பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாடினர்.
தமிழகத்தின் புதிய முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றதை ஒட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அக்கட்சியினர், பட்டாசு வெடித்து ஊர்வலமாக வந்து நான்கு ரோடு சந்திப்பில் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், போச்சம்பள்ளியில் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பேருந்து நிலையத்தில் திரண்டு உற்சாகமாக விசிலடித்தனர். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தவெகவினர் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். புதிய முதலமைச்சரின் பதவியேற்பைத் தொடர்ந்த போச்சம்பள்ளி நகர் முழுவதும் தவெகவினர் மிகுந்த எழுச்சியுடன் காணப்படுகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0