முதல்வர் ஜோசப் விஜயை கண்டித்து திமுக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேச்சு •
திமுக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேச்சு
• திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க திறனானியற்றவர் முதல்வர் விஜய் - கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார்
• பாரம்பரியம் மிக்க சட்டசபையை கூத்துமேடையாக மாற்றியவர் விஜய் - மேற்கு மாவட்ட திமுக செயலளார் அர.சக்கரபாணி பேச்சு
சின்னாளபட்டி, செப்-12
தமிழகத்தில்; விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று முதல்வர் ஜோசப் விஜயை கண்டித்து திமுக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.
தமிழக சட்டசபையில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை அவமரியாதை செய்தும், முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டதை உருவக்கேலி செய்து பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜயயையும், சட்டமன்றத்தில் திமுக மீது அவதூறு பரப்பிவரும் அமைச்சர்களை கண்டித்தும், திமுக சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டட அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மோகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திண்டுக்கல் கிழக்கு திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில துணை பொதுச் செயலாளரும், முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது திரைப்படங்களில் நடித்து அரசியலுக்கு வந்த அனைவருக்கும் வாழ்வு கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவர் வழியில் ஓய்வறியா சூரியனாக தமிழக மக்களின் நலன் மீது அக்கரை கொண்டு அயராது உழைத்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மிசா சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதை அவமரியாதை செய்யும்வகையில் தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பேசியது வன்மையாக கண்டிக்கத் தக்கது என்றதுடன் நான் இதுவரை நடிகர் விஜய் அவர்கள் நடித்த படங்களை பார்த்தது கிடையாது. சட்டசபையில்தான் அவர் நடித்ததை படித்தேன். கண்ணியம் மிக்க தலைவர் ஒருவரை (மு.க.ஸ்டாலின்) 50 ஆண்டுகாலம் அரசியலில் ஈடுபட்டு வருபவரை எந்தவொரு தியாகமும் செய்யாமல், தமிழகத்திற்காக போராடாமல் நேற்று முளைத்த காளான்போல் கட்சி ஆரம்பித்த 2 வருடங்களில் ஆட்சியை பிடித்த ஜோசப் விஜய்க்கு என்ன தெரியும்? என்றார். வைகை அணையிலிருந்து ரூ. 600 கோடி மதிப்பில் குழாய் மூலம் குடி தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மற்றும் வழியோர ஊர்களுக்கு குடி தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு நிதி இல்லை எனக்கூறும் முதல்வர் விஜய் அவரது குடியிருக்கும் பகுதிக்கு அருகே ரூ. 1,200 கோடி மதிப்பில புதிய தலைமை செயலக கட்டிடத்தை கட்ட தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். தமிழகம் முழுவதும் மின்வெட்டு, குடி தண்ணீர் பற்றாக்குறை, போன்ற பிரச்சனைகள் தலைதூக்கி இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம தேவையா? ஏன்றார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மக்கள் நலனுக்கான நல்லாட்சி அமையும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் வீரா.சாமிநாதன், கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர்கள் ஆ.நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட்மேரி, மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.தண்டபாணி, ஆத்தூர் க.நடராஜன், மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன், துணை செயலாளர்கள் ராஜாமணி, சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர் கலைராஜன் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் விவசாய அணி அமைப்பாளர் இல. கண்ணன் திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் ரெட்டியார்சத்திரம் ப.க.சிவகுருசாமி, திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பிள்ளையார்நத்தம் முருகேசன், பாறைப்பட்டி ராமன், மணி, வி.எம்.ஏ.கருமலைபாண்டி, என்.வி.இராஜதுரை, கரிகால பாண்டியன், சௌந்தர்ராஜன், மணிகண்டன், க.சுவாமிநாதன், திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா, மாநகர பொருளாளர் மீடியா சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கே.அஸ்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் மா.கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர்கள் வனிதாதங்கராஜன், பிரதீபாகனராஜ், போதும்பொண்ணு, தனலெட்சுமி சண்முகம், சகிலாராஜா, நந்தகோபால், கவிதாசின்னத்தம்பி, ரேகா அய்யப்பன், பேரூர் கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக சார்பு அணியினர், பேரூர் கழக செயலாளர்கள், இளைஞரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0