2.750 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.
2.750 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது... சிறை
ஏப்ரல் 13 2026,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.R.ஸ்டாலின் IPS* அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் நாகர்கோவில் சற்குண வீதியை சேர்ந்த சுந்தர் என்பவரது மகன் ஹம்ச வர்த்தனன் (26) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 2.750 கிலோ கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையானது மேலும் தீவிரபடுத்தப்படும் என்றும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0