*மாற்றி அமைக்கப்பட்ட டூவீலர் சைலன்ஸர்கள் பறிமுதல்*

Aug 20, 2026 - 15:11
 3
*மாற்றி அமைக்கப்பட்ட டூவீலர் சைலன்ஸர்கள் பறிமுதல்*

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் *டாக்டர் R. ஸ்டாலின், IPS* அவர்களின் அறிவுறுத்தலின்படி, சாலைப் பாதுகாப்பையும் பொதுமக்களின் அமைதியையும் உறுதி செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் மாற்றியமைக்கப்பட்ட (Altered) சைலன்சர்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, 4 இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிக ஒலி எழுப்பும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொதுமக்களுக்கு இடையூறையும், ஒலி மாசுபாட்டையும் ஏற்படுத்துவதுடன், சாலைப் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0