உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 100% தேர்ச்சி – மாணவர்கள் தாளாளரிடம் ஆசி பெற்று மகிழ்ச்சி

May 9, 2026 - 12:58
May 9, 2026 - 12:58
 5
உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 100% தேர்ச்சி – மாணவர்கள் தாளாளரிடம் ஆசி பெற்று மகிழ்ச்சி

உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் 100% தேர்ச்சி – மாணவர்கள் தாளாளரிடம் ஆசி பெற்று மகிழ்ச்சி

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில்

செயல்பட்டு வரும் பெஸ்கி மேல்நிலைப் பள்ளி, இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளது. தேர்வில் பங்கேற்ற 245 மாணவர்களும் வெற்றி பெற்று பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

பள்ளியின் தாளாளர் சிஸ்டர் செல்வராணி தலைமையில் மாணவர்கள் சிறப்பாகப் பயிற்சி பெற்று இந்த வெற்றியை பெற்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளியின் முதல் மாணவியாக எஸ். தேவிபாலா 589 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். பி. ஸ்வேதா 570 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், பி. டி. திராவிட குழலி 563 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் பள்ளி தாளாளர் சிஸ்டர் செல்வராணி அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது தாளாளர் மாணவர்களை பாராட்டி, அவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் மாணவர்களின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0