தமிழகத்தில் புகழ் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்.

Apr 28, 2026 - 21:25
 42
தமிழகத்தில் புகழ் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்.

இவ்விழாவில் தமிழக மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ,ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான யாத்திரீர்கர்கள் கலந்துகொண்டு நேர்ச்சை கடன் செலுத்தினர். நேற்று மாலை 4:00 மணி அளவில் ஏர்வாடி முஜாஹிர் நல்ல இபுராகிம் மஹாலிலிருந்து யானை, குதிரை, ஒட்டகம், வான வேடிக்கையுடன் கொடி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தர்காவே வந்தடைந்தது.மாலை 6.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட தலைமை காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் மார்க்க அறிஞர்கள், ஆலிம்கள்,உலமாக்கள் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அஹமது இபுராஹிம், துணைத் தலைவர் முகமது சுல்தான், செயலாளர் ஜாகிர் ஹுசைன் மற்றும் தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் கமிட்டியாளர்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும் அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தனக்கூடு திருவிழா துவங்கப்பட்டு 11ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலையில் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தன பூசம் நிகழ்ச்சி நடைபெறும். மே 18ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் சந்தனக்கூடு திருவிழா முடிவடையும். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை கமிட்டி யாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0