போதைப்பொருள் மாணவர்களை தடுக்கும் வகையில்
இக்கூட்டத்தில், மாணவர்களிடம் ஏற்படும் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் மனநலன் தொடர்பான சவால்களை எவ்வாறு அணுக வேண்டும், போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்களை ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கண்டறிந்து சரியான வழிகாட்டுதல் வழங்க வேண்டும், கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எவ்வாறு தீவிரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
மேலும், கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்க முடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. M. பிரதாப், IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின், IPS, முதன்மை கல்வி அலுவலர் திரு. பிரின்ஸ் ஆரோக்கியராஜ், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. இளஞ்செழியன் மற்றும் மாவட்டம் முழுவதிலுமுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
@all
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0