*நெமிலி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டிகள் ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் மோகனா துவக்கி வைத்தார்.*
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்து சயனபுரம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காவேரிப்பாக்கம் வட்டார விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் காவேரிப்பாக்கம் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இவ் விளையாட்டு போட்டியில் தடகள விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை இரணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் மோகனா தலைமை தாங்கி போட்டிகளை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். "மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நல்ல ஆரோக்கியத்தையும், படிப்பதற்கு ஏற்ற மன வலிமையையும் கொடுக்கும் என்று கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்". மேலும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் துரைவேல் (இடைநிலை), நிரஞ்சனாதேவி (மெட்ரிக்), சிவராமன் (தொடக்க கல்வி), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் வேதையா, தாளாளர் விஜயா வேதையா, முதல்வர் இன்பராஜசேகரன் உடற்கல்வி இயக்குநர்கள் பூர்ணச்சந்திரன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை தீபா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0