உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை மெட்ரிகுலேஷன் பள்ளி

May 9, 2026 - 13:03
 4
உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை   மெட்ரிகுலேஷன் பள்ளி

உளுந்தூர்பேட்டை சரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை

 கள்ளக்குறிச்சி மாவட்டம்

உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்தில் செயல்பட்டு வரும் சரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளது இதில் சாரதா ஆசிரம மூத்த நிர்வாகி ஆத்ம விகாசப்பிரிய அப்பா அவர்களிடம் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் ஆசி பெற்றனர் மேலும் தேர்வில் பங்கேற்ற 214 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளனர் பள்ளியின் முதல் மாணவராக ஜே.ஹர்ஷாந்த் ராஜன் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார் இரண்டாம் இடத்தை ஜி.அஞ்சலி 589 மதிப்பெண்களுடன் பெற்றார் மூன்றாம் இடத்தை வி.குரு.பிரணேஷ் மற்றும் ஆர்.லட்சுமி நாராயணன் தலா 587 மதிப்பெண்களுடன் பகிர்ந்து கொண்டனர் மேலும், 590க்கு மேல் 1 மாணவர் 580க்கு மேல் 10 மாணவர்கள் 570க்கு மேல் 17 மாணவர்கள் 550க்கு மேல் 41 மாணவர்கள் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர் 500க்கு மேல் 99 மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருப்பதும் பள்ளியின் சிறப்பை வெளிப்படுத்துகிறது இந்த சிறப்பான தேர்ச்சி முடிவால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0