கொலை குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை அபராதம் 30,000

Aug 20, 2026 - 14:51
Aug 20, 2026 - 15:04
 13
கொலை குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை அபராதம் 30,000

 கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R .ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மருதூர் குறிச்சி மணி என்பவரின் மகன் சாது சுந்தர் சிங் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மிளகுமூடு வெளிக்கோடு பகுதியை சேர்ந்த லூகாஸ் என்பவரின் மகன் சனேஷ் (36) புளிச்சன்விளை பகுதியை சேர்ந்த வர்கீஸ் என்பவரின் மகன் சஜீவன்(38) செவுடுவிளை பகுதியை சேர்ந்த எலியாஸ் என்பவரின் மகன் குமார் ராஜ் ஆகியோரை கைது செய்த காவல்துறை தக்கலை காவல் நிலைய குற்ற எண் 117/2010 U/S 294(b),302,201,506(ii) IPC இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மூன்றாவது குற்றவாளி குமார் ராஜ் ஏற்கனவே இறந்து போனநிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 30000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0