தமிழக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி சின்னாளப்பட்டி நகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரிக்கை சமூக ஆர்வலர் நெசவாளர்கள் பாராட்டு
1.

தமிழக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சின்னாளபட்டி நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோரிக்கை – கைத்தறி நெசவாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு
• வைகை ஆற்றிலிருந்து நிலக்கோட்டை, சின்னாளபட்டி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு குழாய் மூலம் குடி தண்ணீர் கொண்டுவந்து குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் - சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை
சின்னாளபட்டி, ஆக-20
தமிழக சட்டசபையில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் சின்னாளபட்டி நகரின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, வைகை ஆற்றிலிருந்து நிலக்கோட்டை, சின்னாளபட்டி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு குழாய் மூலம் குடி தண்ணீர் கொண்டுவந்து குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்ததற்கு கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியி;ல் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து 7 முறை வெற்றிபெற்றவர். ஆத்தூர் தொகுதி மக்களால் தென்பாண்டி சிங்கம் என அன்போடு அழைக்கப்படும் ஐ.பெரியசாமி அவர்கள் அமைச்சராக பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனக்கு வாக்களித்த மக்களின் நலனில் என்றும் அக்கரையோடு செயல்படுபவர் ஐ.பெரியசாமி அவர்கள். 16 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதி மக்களின் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் தி;ட்டத்தை கொண்டுவந்தார். அதன் பின்னர் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அருகில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அம்மையநாயக்கனூர் பேரூராட்சி வரை செயல்பட்டு வருகிறது. ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி அவர்கள் செயல்படுத்தும் அனைத்து நலத் திட்டங்களும் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு திட்டமாக இருக்கும். ஏழை மாணவர்கள் படிக்க, அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் தமிழகத்திலேயே சிறப்பானதொரு கூட்டுறவுத் துறை மூலம் கலைஞர் நூற்றாண்டு விழா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ரூ. 77 கோடி மதிப்பில் கொண்டுவந்ததால் ஏழை மாணவர்கள் சிரமம் இன்றி உயர் கல்வி கற்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு தொகுதி மக்கள் நலனில் அக்கரையோடு செயல்படும் ஐ.பெரியசாமி அவர்கள் நேற்று முன் தினம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது தொகுதி மட்டுமின்றி நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி ஆகிய பகுதிகளுக்கு வைகை ஆற்றிலிருந்து குழாய் மூலம் குடி தண்ணீர் கொண்டுவந்து குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதுடன், அவருக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. ஆத்தூர் தொகுதி மட்டுமின்றி நிலக்கோட்டை, திண்டுக்கல் தொகுதி மக்களும் மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இதுதவிர சின்னாளபட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு மனதார பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். இது குறித்து சின்னாளபட்டியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில் ஆத்தூர் தொகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஐயா ஐ.பெரியசாமி அவர்கள். 37 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவொரு உதவிகள் தேவைப்பட்டாலும் அதை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் சேலைகளை கோஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்யாதபோதும், முறையான கூலி வழங்காமல் இருந்தபோதும், நெசவாளர்களுக்கு ஆதரவாக பாடுபட்டவர் ஐ.பெரியசாமி அவர்கள். இம்முறை சின்னாளபட்டி பகுதியில் ஒரு சில காரணங்களினால் அவருக்கு வாக்கு குறைவாகத்தான் கிடைத்தது. இருந்தாலும் தனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என பாகுபாடு காட்டாமல் சின்னாளபட்டி நகர் மக்கள் நலனில் அக்கரை கொண்டு சட்டமன்றத்தில் எங்கள் ஊரின் (சின்னாளபட்டி) குடி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஐயா பெரியசாமி அவர்கள் பேசியது அவரின் தாய் உள்ளத்தை காட்டுகிறது. அதனால்தான் தொகுதி மக்கள் அவரை தென்பாண்டி சிங்கம், தொகுதி மக்களின் செல்லப்பிள்ளை, ஆத்தூர் தொகுதியின் நிரந்தர அமைச்சர் என்று அழைக்கிறோம் என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0