ஏற்காட்டில் உணவு பாதுகாப்பு துறை நடத்திய திடீர் சோதனையில் காலாவதியான தரமில்லால் உணவுகள் பறிமுதல்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள உணவகம் மற்றும் உணவு பொருட்கள் விற்கும் கடைகளில் காலாவதியான மற்றும் கெட்டுப் போன உணவு பொருட்களை விற்று வருவதாக புகார் எழுந்து வந்தது. அதை தொடர்ந்து ஏற்காடு வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரி சேஷாத்திரிகிருஷ்ணன் மற்றும் குழுவினர் ஏற்காட்டில் உள்ள பல்வேறு உணவகங்கள், உணவு பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் நொறுக்கு தீனி விற்கும் கடையில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்காட்டில் இருந்து ஒண்டிக்கடை செல்லும் சாலையில் உள்ள சிப்ஸ் கடையில் சோதனை செய்ததில் எந்தவிதமான தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி விவரங்கள் இல்லாத ஏழு கிலோ சிப்ஸ் பறிமுதல் செய்து அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். அதை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் பறிமுதல் செய்த காலாவதியான உணவு பொருட்களை குப்பையில் கொட்டி அளித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0