மேட்டூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளரை தவெக தொண்டர்கள் திருப்பி அனுப்பினர்...

Apr 1, 2026 - 13:38
Apr 1, 2026 - 15:14
 5
மேட்டூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளரை தவெக தொண்டர்கள் திருப்பி அனுப்பினர்...
மேட்டூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளரை தவெக தொண்டர்கள் திருப்பி அனுப்பினர்...

சேலம்

சேலம் மேட்டூரில் தமிழக வெற்றி கழக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை திருப்பி அனுப்பிய தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள்...

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் செல்வம் நிர்வாகிகளை சந்திக்க கொளத்தூர் பகுதிக்கு சென்றார்.அப்போது அங்கேயிருந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரது காரை மரித்ததோடு அவரை ஊருக்குள் நுழையாமல் திருப்பி அனுப்பினர். ‌

அப்போது அவருடன் வந்திருந்த மற்ற நிர்வாகிகள்,அந்த பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் கூறும் போது 'தலைவர் விஜய் நடித்த ஜனநாயகம் படத்திற்கு நாங்கள் முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்களை எங்களிடம் இருந்து திரும்பப் பெற்று அதனை எங்களுக்கே அதிக விலைக்கு விற்றதாகவும்,அதேபோல் ஒருதலைபட்சமாக வேட்பாளர் செல்வம் செயல்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தமிழக வெற்றிக்கழகம் தற்போது முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது .ஆனால்,இப்போது மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் செல்வத்திற்கு கடும் எதிர்ப்பு அவர்கள் கட்சியிலேயே எழுந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0