எடப்பாடி தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமா.?

Apr 7, 2026 - 17:28
 3
எடப்பாடி தவெக வேட்பாளர் அருண்குமார் மாயமா.?

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அருண்குமாரை காணவில்லை என அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 50 க்கும் மேற்பட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

த.வெ.க.வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனுவில் சில தவறுகள் இருந்ததால் வேட்பு மனு, தேர்தல் தேர்தல் கமிஷனால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும்,இதை அடுத்து அருண்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள த.வெ.க. கட்சியினர் இடையே தற்போது வேக வேகமாக பரவி வருகிறது. எடப்பாடியில் தா.வெ.க. தொண்டர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி வருகின்றனர். திடீரென த.வெ.க.வேட்பாளர் காணாமல் போன விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0