சேலம் ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வாழப்பாடியில்.
சேலம் ஏப்ரல் - 5
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நிலையில் நேற்று
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள மு.க. ஸ்டாலின் அறிவாலயத்தில் திமுக கட்சியின் சார்பில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஏழுபுளி டி.எம். ரேவதி மாதேஸ்வரன் அவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிமுகம் செய்து வைத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கேட்டுக்கொண்டனர்கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஏற்காடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரேவதி மாதேஸ்வரன் அவர்கள் வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஓய்வின்றி உழைத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளார் இதில் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட அமைப்பாளர் எ.எ.ஆறுமுகம். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் மாவட்டம், ஒன்றியம் பேரூர் கிளை நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0