திண்டுக்கல் மாவட்டத்தி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மதுபானம் கள்ளச் சந்தையில் விற்பனை
• செம்பட்டி, நடுப்பட்டி, ஜெ.புதுக்கோட்டை, அஞ்சுகம் காலனி, சின்னாளபட்டி பைபாஸ், இராமநாதபுரம் பகுதிகளில் டாஸ்மாக் மது விற்பனை அமோகம்
• கூலித்தொழிலாளர்களே வேலைக்கு செல்லாமல் செல்லிங் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்
சின்னாளபட்டி, செப்-16
விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்திற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் குடிமகன்களின் தேவையை செல்லிங் விற்பனை பூர்த்தி செய்தது. செம்பட்டி, நடுப்பட்டி, ஜெ.புதுக்கோட்டை, அஞ்சுகம் காலனி, சின்னாளபட்டி பைபாஸ், இராமநாதபுரம், காமுபிள்ளை சத்திரம் பகுதிகளில் டாஸ்மாக் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கையாக டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்திரவிட்டிருந்தது. கடை மூடப்பட்ட பகுதிகளில் புற்றீசல்போல் செல்லிங் விற்பனை கடைகள் கடந்த 2 இரண்டு நாட்களாக அதிகரித்துள்ளன. ஒரு நபர் இரண்டு முதல் ஐந்து பாட்டில்கள் வரை வைத்துக் கொள்ளலாம் என கூறிக் கொண்டு கூலித்தொழிலாளர்களில் ஒரு சிலர் டாஸ்மாக்கில் மதுபான பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று அதில் வரும் லாபத்தை கொண்டு மதுபானங்கள் வாங்கி குடிக்கின்றனர். இவர்கள் வேலைக்கே செல்லாமல் தினசரி ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்ப்பதால் இதையே டாஸ்மாக் மதுபாட்டிகள் செல்விங் விற்பனையை தொடர்ந்து செய்வதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்டிட தொழிலளார்கள், பெயிண்ட் வேலை செய்யும் தொழிலாளர்களில்; ஒரு சிலர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இதுமாதிரி செல்லிங் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் தங்களது இரு சக்கர வாகனத்திலேயே மது பாட்டிகளை வைத்துக் கொண்டு செல்போன்மூலம் அழைக்கும் நபர்களுக்கு நேரடியாகவே சென்று மதுபானங்களை விற்று வருகின்றனர். குறிப்பாக சின்னாளபட்டியைச் சுற்றி அம்பாத்துரை, நடுப்பட்டி, இராமநாதபுரம், பண்ணைப்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆரியநெல்லூர் ஆகிய பகுதிகளிலும் காமுபிள்ளை சத்திரம், சீவல்சரகு, ஆத்தூர், ஆத்தூர் பிரிவு, மல்லையாபுரம், ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் நின்று கொண்டு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை விற்று வருகின்றனர். இத்தொழிலில் ஒரு சில கிராமங்களில் பெண்களும் ஈடுபட்டு வருவது வேதனையான ஒன்று. மாவட்ட காவல்துறை நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போலி மதுபானை விற்பனையும் அதிகரித்துவிடும். கூலித் தொழிலாளர்களே வேலைக்கு செல்லாமல் செல்லிங் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படும் முன் மாவட்ட காவல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0