மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி நீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி

Apr 8, 2026 - 22:24
Apr 8, 2026 - 23:45
 109

*மதுரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி*

மதுரை, ஏப்ரல்-08,

     மதுரை மாவட்டம் ம. சத்திரப்பட்டி பொ. கோபாலகிருஷ்ணன் அரசு மேல்நிலை பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில்.பி.சி.எஸ்.தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர் பிரகாஷ் பழனி மற்றும் விஜயகுமார் பழனி அவர்களால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமையாசிரியை C.உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார்.பி.சி.எஸ். நிறுவனத்தை சேர்ந்த அசோக் குமார் மற்றும் இப் பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்களும் சேர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.

  இதில் பெற்றோர் -ஆசிரியர் சங்கம் ம. கோபி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைவரும் பள்ளியின் வளர்ச்சியை பற்றி உரையாடினர்.இதில் முன்னால் மாணவர்கள் C. பெரியய்யா(உதவி காவல் ஆய்வாளர்), கோபாலகிருஷ்ணா (வழக்கறிஞர்), K. செல்வகுமார்(LIC), ராஜா(SETC) ஆகியோர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பிரேம் ஆனந்த் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.நிகழ்வின் முடிவில் ஆசிரியர்,ஆசிரியைகள் நன்றி கூறினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1