மதுரை மேலூர் மதுரை கிழக்கு தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு.

Apr 4, 2026 - 19:03
 11
மதுரை மேலூர் மதுரை கிழக்கு தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு.

தேர்தல் பொதுப் பார்வையாளர்  சமர்த் வர்மா, இஆப அவர்கள்

தேர்தல் தயார்நிலையை முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு மேலூர் சட்டமன்றத் தொகுதி கருங்காலக்குடி பகுதியில் அமைந்துள்ள பதற்றமான மற்றும் சாதரணமாக வாக்கு சாவடிகளில் ஆய்வு செய்தார்.

வாக்கு சாவடிகளில் தேர்தல் நாள் அன்று வாக்கு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வருகைக்கு தேவையான சாய்வுதளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கினார்.

மேலும் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆனையூர் பகுதியில் உள்ள பாதிப்புக்குள்ளாகும் மற்றும் இயல்பான வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். 

ஆய்வில் இரு சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களுக்கு, மாதிரி நடத்தை விதிகளைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0