கன்னியாகுமரி: ஒழுங்கினசேரி சாலை சீரமைக்க கோரிக்கை -
கன்னியாகுமரி: ஒழுங்கினசேரி சாலை சீரமைக்க கோரிக்கை - சமூக ஆர்வலர் ஆப்பிள் அஜித் வலியுறுத்தல்
கன்னியாகுமரி, அக்.22-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒழுகினசேரி பிரதான சாலை கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த சாலையில் ஜெபம் திட்டு முதல் ஒழுகினசேரி சந்திப்பு வரை தார் சாலை பெயர்ந்து, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக இது உள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன. சாலையின் மோசமான நிலையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆப்பிள் அஜித் கூறுகையில்,
"ஒழுகினசேரி சாலை மாவட்டத்தின் மிக முக்கியமான சாலை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை இது. குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக இந்த சாலையை ஆய்வு செய்து தரமான முறையில் சீரமைத்து தர வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சாலை சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0