அம்பாத்துரை ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி பெருமாள் கோவில் குளத்தில் கல்குவாரி போல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் திருட்டு – வருவாய் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாத அவலநிலை •
அம்பாத்துரை ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி பெருமாள் கோவில் குளத்தில் கல்குவாரி போல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் திருட்டு – வருவாய் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாத அவலநிலை
• 30 அடி ஆழத்திற்கு அனுமதியின்றி பட்டப்பகலில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள், பாறைகளை கொண்டு செல்வதாக விவசாயிகள் புகார்
சின்னாளபட்டி அக்-10
அம்பாத்துரை ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி பெருமாள் கோவில் குளத்தில் கல்குவாரி போல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதை வருவாய் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் 30 அடி ஆழத்திற்கு அனுமதியின்றி பட்டப்பகலில் மண் மற்றும் ஜல்லிக்கற்கள், பாறைகளை கொண்டு செல்வதாக விவசாயிகள் புகார் செய்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அருகே குளம் உள்ளது. இந்தகுளத்தில் மண் திருட்டு, கல்குவாரியில் நடைபெறுவது போல் 30 அடி ஆழத்திற்கு மண் மற்றும் பாறைகளை உடைத்து மண் கொள்ளையர்கள் கட்டிடபணிகளுக்கு எடுத்துச் செல்வதாக அப்பகுதி விவசாயிகள் புகார் செய்கின்றனர். பொக்லைன் மற்றும் இயந்திரங்களை கொண்டு குளத்தில் மண் எடுத்தது போக பாறைகளையும் உடைத்து ஒரு குவாரி போல் குளத்தை சேதப்படுத்திவருகின்றனர். வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மண் மற்றும் மணல் கொள்ளையர்கள் பட்டப்பகலில் சர்வசாதாரணமாக பாறைகளையும், மண்களையும் எடுத்துச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில் குளத்தில் மண் எடுக்க அனுமதி பெறாமலேயே மண்ணை எடுத்துச் செல்கின்றனர். 10 அடி ஆழத்திற்கு மண் எடுத்தது போக 20 அடி ஆழத்திற்கு சரளை பாறைகளையும் உடைத்து கட்டிட பணிகளுக்கு எடுத்துச்செல்கின்றனர். வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பட்டப்பகலிலேயே மண் கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0