கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காலாண்டு மற்றும் முதல் பருவ விடுமுறையில் நூலக புத்தகங்களை மாணவ, மாணவிகள் வாசிக்க வேண்டும் என அறிவுரை.
கந்தர்வக்கோட்டை செப் 25
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலாண்டு மற்றும் முதல் பருவம் தேர்வு செப்டம்பர் 16ல் தொடங்கி செப்டம்பர் 25வரை முதல் பருவம் மற்றும் காலண்டர் தேர்வு நடைபெற்றது. காலாண்டு தேர்வு முடிந்து செப்டம்பர் 26 முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தரவகோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசும் பொழுது கந்தர்வகோட்டை பகுதிகளில் உள்ள கிளை நூலகத்தில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன அது மட்டுமில்லாமல் தினசரி நாளிதழ்கள் பத்திருக்கு மேற்பட்டவையும் பருவ இதழ்கள் நூற்றுக்கு மேற்பட்ட இதழ்களும் வருகின்றன. நேரம் கிடைக்கும் பொழுது நூலகங்களுக்குமாணவ மாணவிகள் சென்று வாசிக்க வேண்டும். விடுமுறை நாளில் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று வரலாற்று நிகழ்வுகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் தொலைத்தொடர்பு, நவீன கால வரலாறு உள்ளிட்ட நூல்களை வாசிக்க வேண்டும் எனவும். தினசரி செய்தித்தாள்கள் பருவ இதழ்களை வாசித்து பயன்பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். காலாண்டு மற்றும் முதல் பருவ விடுமுறைக்கு பின் அக்டோபர்5தேதி மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0